அமெரிக்காவில் ஒரு லட்சத்தை நெருங்கும் பலி என்ணிக்கை... கோல்ப் விளையாடிய டிரம்ப்

அமெரிக்காவில் ஒரு லட்சத்தை நெருங்கும் பலி என்ணிக்கை... கோல்ப் விளையாடிய டிரம்ப்

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வரும் நிலையில் கோல்ஃப் விளையாடி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய பிறகு இரண்டு முறை அவர் கோல்ஃப் விளையாடச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்துப் போட்டியிட இருக்கும் ஜோ பிடன் அவரை கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பான 30 நொடி வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜோ பிடன், ஒரு லட்சம் உயிரிழப்பு, பல கோடி வேலையிழப்பு என அமெரிக்கா தவிக்கும் சூழலில் அதிபர் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருக்கிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் மார்ச் 13ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்றை தேசிய அவசர நிலையாக டிரம்ப் அறிவித்தார். தேசிய அவசரநிலை அறிவிப்புக்கு முன்பாக மார்ச் 8-ம் தேதி புளோரிடாவில் உள்ள வெஸ்ட் பாம் கடற்கரையில் உள்ள தனக்கு சொந்தமான கிளப்பில் கோல்ப் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்