கொரோனாவால் 53 சதவீத நாடுகள் கடந்த 2மாதமாக தடுப்பூசிகளை நிறுத்தி வைத்துள்ளது-உலக சுகாதார நிறுவனம்



கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் உள்ள  8 கோடி குழந்தைகள் வழக்கமான தடுப்பூசி போட முடியாமல் தவித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


கொரோனா வைரஸ் பரவலால் உலக நாடுகள் சிக்கி தவித்து வருகின்றன. வைரஸ் தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப், காவி (Gavi) மற்றும் சபின் தடுப்பூசி நிறுவனம் இணைந்து சேகரித்த தரவுகளின் படி 68 நாடுகளில் வழக்கமான நோய்த்தடுப்பு சேவைகள் கணிசமாக தடைபட்டுள்ளதாகவும்  இந்த நாடுகளில் உள்ள  1 வயதுக்குட்பட்ட சுமார் 80 மில்லியன் (8 கோடி) குழந்தைகள் தடுப்பூசி போடப்படாமல் பாதிக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளது

 129 நாடுகளில் ஆய்வு செய்ததில், 53 சதவீத நாடுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தடுப்பூசி சேவைகளை மொத்தமாக நிறுத்தி வைத்ததாக அறிவித்துள்ளன.

  குழந்தைகளுக்கு  வழக்கமான தடுப்பூசிகள் போடப்படுவது குறைந்துள்ளதால் நோய் தொற்றும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்