இந்தியாவிடம் தேவையில்லாமல் வம்பு பண்றாங்க! – சீனா மீது அமெரிக்கா அடுத்த குற்றச்சாட்டு..!


கொரோனா வைரஸ் பரவலில் தொடர்ந்து சீனா மீது குற்றம் சாட்டி வரும் அமெரிக்கா தற்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் எல்லை பிரச்சினையில் சீனா தலையிடுவதாக குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெலியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: ”சீனா தனது அண்டை நாடுகளான இந்தியா மற்றும் பிற நாடுகளிடம் ஆத்திரமூட்டும் வகையான ராணுவ அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது. இந்திய எல்லை பகுதியில் சீனா அத்துமீறுவதாக  ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க மூத்த அதிகாரி ஆலீஸ் வேல்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது. அமெரிக்கா அரசு சீனா மீதுள்ள காழ்ப்புணர்ச்சியில் பேசுவதாகவும், சீனா மற்றும் அண்டை நாடுகளின் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது முட்டாள்தனமான செயல் என்றும், பிரச்சினைகளை நாங்களே பேசி தீர்த்துக் கொள்வோம்” என்றும் கூறியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்