பிரேசிலில் ஒரே நாளில் 20,000 பேருக்கு கொரோனா

பிரேசிலில் ஒரே நாளில் 20,000 பேருக்கு கொரோனா: ஷாக் ஆன மக்கள்
பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகை ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிலும், பலி எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 
இந்த நிலையில், லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. 
பிரேசில் நாட்டில் ஒரே நாளில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி, மொத்தம் 3 லட்சத்து 30 ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
அமெரிக்காவை தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்ட நாடாக பிரேசில் நாடு மாறி வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் பிரேசில் நாடு, ரஷ்யாவை பின்னுக்கு தள்ளியது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.42%
 • அனுபவக் குறைவு
  24.46%
 • கிரிக்கெட் அரசியல்
  35.25%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.87%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்