கொரோனா சிகிச்சைக்காக கேரளாவைச் சேர்ந்த மருத்துவ குழு ஐக்கிய எமிரேட்ஸுக்கு பறந்தது..!

கொரோனா  சிகிச்சைக்காக கேரளாவைச் சேர்ந்த மருத்துவ குழு ஐக்கிய எமிரேட்ஸுக்கு பறந்தது..!

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக கேரளாவை சேர்ந்த 105 பேர் கொண்ட மருத்துவக் குழு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்றுள்ளது. 

கேரளாவை சேர்ந்த கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்தும் உள்ள மருத்துவர்கள் கொண்ட ஒரு மருத்துவ குழு அபுதாபியை அடைந்துள்ளது. இவர்கள் கடந்த புதன்கிழமை கொச்சி விமான நிலையத்திலிருந்து சிறப்பு பட்டய எட்டிஹாட் விமானத்தில் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஹெல்த்கேர் குழுவான VPS  ஹெல்த்கேரின் ஒரு முன்முயற்சியில், குழு உறுப்பினர்கள் எமிரேட்ஸ் முழுவதிலும் உள்ள பல்வேறு கொரோனா மருத்துவமனைகளில் உள்ள முக்கியமான பராமரிப்பு பிரிவுகளில் பணியாற்றுவார்கள் எனவும் தெரிகிறது. 

இதனால் கொரோனா வைரஸை எதிர்ப்பதில் ஐக்கிய அரபு எமிரேட் அரசாங்கத்தின் முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் என்று அதிகாரிகள் இங்கு தெரிவித்தனர்.

பயணத்திற்காக இரு நாடுகளிலும் உள்ள வெளிவிவகார அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகம் ஆகியவற்றிலிருந்து மருத்துவக் குழு அனுமதி பெற்றதை அடுத்து பயண தேதி தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

கேரளாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஒரு மருத்துவ குழுவை அனுப்புவதில் பெருமிதம் கொள்கிறோம் என்று VPS ஹெல்த்கேர் இயக்குநர் (இந்தியா) ஹபீஸ் அலி உல்லத் தெரிவித்துள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில், அரபு நாட்டில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கேரளாவைச் சேர்ந்த 38 பேர் உட்பட 88 சுகாதார ஊழியர்கள் அடங்கிய குழுவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்