கொரோனா சிகிச்சையில் ஆறே வாரங்களில் 23 கிலோ இழந்த நபர்..!

கொரோனா சிகிச்சையில் ஆறே வாரங்களில் 23 கிலோ இழந்த நபர்..!

கொரோனா சிகிச்சையின் போது கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மைக் ஷால்ட்ஸ் என்பவர் 6 வாரங்களில் 23 கிலோ எடை இழந்துள்ளதாக தனது போட்டோகளை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வர்ருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக உலகமே உலுங்கி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மைக் ஷால்ட்ஸ் என்பவர் சிகிச்சை பெற்றுள்ளார். 

அந்த சிகிச்சை பிறகு அவரிடம் ஏற்பட்ட தனது மாற்றத்தின் முன்னர் எடுத்த போட்டோவையும் அதன் பின்னர் எடுத்த போட்டோவையும் இணைத்து பதிவிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அவர் வெளியிட்டுள்ள பதிவில் மைக் ஷால்ட்ஸ் சிகிச்சை தொடங்குவதற்கு முன்பு 86 கிலோ எடையும், தற்போது அவரது எடை 63 கிலோவாகவும் குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் வென்டிலேட்டரில் 6 வாரங்கள் மயக்கமடைவது அல்லது இன்டூபேட் செய்யப்படுவது எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை அனைவருக்கும் காட்ட தான் விரும்பியதாலேயே அந்த போட்டோகளை வெளியிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
    59.09%
  • தவறான முடிவு
    20.8%
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
    11.89%
  • படத்தின் லாபத்திற்கு உதவும்
    8.22%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்