அமெரிக்காவில் தொடரும் வேலை இழப்பு: வரும் மாதங்களில் 20% முதல் 25% வரை உயரலாம்

 

:அமெரிக்காவில் கடந்த 3 வாரங்களாக ஊரடங்கு தளர்த்த  பட்டாலும் வேலையிழந்தோர் எண்ணிக்கை 4 கோடியை நெருங்கும் என.தகவல்கள்  தெரிவிக்கின்றன


கொரோனாவை ஆரம்பத்திலேயே தடுக்க தவறியதால் அமெரிக்கா   நெருக்கடி நிலையினை சந்தித்து வருகிறது. தற்போது வரை உயிரிழப்புகள் நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது. ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது

இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு வேலையிழப்பு காரணமாக உதவித் தொகை கோரி   3.86 கோடி பணியாளர்கள் அரசிடம் விண்ணப்பித்துள்ளனர். 

கடந்த வாரம் மட்டும்  24 லட்சம் பேர் உதவித் தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர்.ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையிலும் வேலைவாய்ப்பு சந்தைகள் பழைய நிலைக்கு திரும்பவில்லை என தொழிலாளர் நலத்துறையினர் கூறுகின்றனர். 

அமெரிக்க வேலையின்மை மே அல்லது ஜூன் மாதங்களில் 20% முதல் 25% வரை உயரக்கூடும். இந்த எண்ணிக்கை 90 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெரும் மந்தநிலையின் போது கடைசியாகக் காணப்பட்டது என்று பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பாவல் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  59.61%
 • தவறானது
  17.9%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.9%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.6%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்