வாரத்தில் 4 நாள் மட்டுமே வேலை

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு நியூசிலாந்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
நியூசிலாந்தில் கொரோனா தாக்கம் இருக்கும் நிலையில், வாரத்தில் 4 நாள் மட்டுமே வேலை, மற்ற 3 நாட்கள் விடுமுறை அளிக்கும் திட்டத்துக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பேஸ்புக் பக்கத்தில், வாரத்தில் 4 நாள் வேலை வேண்டும் என நிறைய பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். வாரத்தில் 3 நாள் விடுமுறை என்பது நீண்ட விடுமுறையாகும். இதனால் நியூசிலாந்து மக்கள் நாடு முழுவதும் அதிகம் பயணிக்க வழி கிடைக்கும். தற்போது நாட்டின் எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா மற்றும் பொருளாதாரத்தை உயர்த்த இது வழிவகுக்கும் என பதிவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்