சீனாவில் எட்டு மாதங்களுக்கு முன்பாகவே அறிகுறியின்றி அமைதியாக பரவிய கொரோனா..?

சீனாவில் எட்டு மாதங்களுக்கு முன்பாகவே அறிகுறியின்றி அமைதியாக பரவிய கொரோனா..?


சீனாவில் எட்டு மாதங்களுக்கு முன்பே கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என ஸ்பெயின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாத்தில் சீனாவின் ஹுபே மாகாணத்தின் உகான் நகரில் கொரோனா பரவ தொடங்கியதாக நம்பப்படுகிறது. இது குறித்து ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 கடந்த அக்டோபர்-நவம்பர் மாதங்களில் வவ்வால்களிடம் தோன்றிய வைரஸ் அடையாளம் தெரியாத பிராணி அல்லது பிராணிகளின் பாகங்களில் பரவி உள்ளது. அந்த சமயத்தில், சீனாவில், அடுத்தடுத்து மூன்று பெரிய திருவிழாக்கள் வந்ததையொட்டி, உயிருள்ள பிராணிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் கொள்முதல் மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது.
 
இந்த வகையில், அறிகுறியின்றி அமைதியாக பரவிய கொரோனா, டிசம்பரில், திருவிழா காலத்தில் அதிக மக்கள் கூடிய போது, வேகமாக பரவி, பாதிப்பை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, உகான் நகரில், சீனாவின் புத்தாண்டுக் கொண்டாட்டம், குடும்ப விருந்து என்ற இரு பெரிய விழாக்களும், அவற்றில் மக்கள் அதிக அளவில் கூடியதும், கொரோனா பரவ முக்கிய காரணம் என தெரிவித்துள்ளனர்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
    59.09%
  • தவறான முடிவு
    20.8%
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
    11.89%
  • படத்தின் லாபத்திற்கு உதவும்
    8.22%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்