உலகளவில் ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

உலகளவில் ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,000ஆக பதிவாகியுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 
உலகளவில் கொரோனா பாதிப்பு 50.82 லட்சத்தை கடந்துள்ளது. இதில் 20 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பணக்கார நாடுகள் ஊரடங்கிலிருந்து வெளிவரத் தொடங்கியுள்ள நிலையில், ஏழை நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் கவலையை அதிகப்படுத்தியுள்ளது என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்