கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இத்தாலியை பின்னுக்குத்தள்ளி 5வது இடத்திற்கு உயர்ந்தது பிரேசில்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இத்தாலியை பின்னுக்குத்தள்ளி 5வது இடத்திற்கு உயர்ந்தது பிரேசில்.
கொரோனா வைரஸ் தனது ருத்ர தாண்டவத்தை ஆடி வருகிறது. அதில் தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் கடந்த வெள்ளிக்கிழமை அதிக அளவிலான கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று மேலும் 14,919 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது.அங்கு தொடர்ந்து பாதிப்பின் அளவும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த பிப்ரவரி 25ம் தேதி முதல் கொரோனா பாதிப்பு பிரேசிலில் கண்டறிப்பட்ட நிலையில் தற்போது வரை பிரேசிலில் 2.33 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், தொற்றால் பாதிக்கப்பட்டு 15,633 பேர் பலியாகியுள்ளனர்.அங்கு சமீப நாட்களில் சராசரியாக 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட இத்தாலியின் பாதிப்பு எண்ணிக்கையை தற்போது பிரேசில் முந்தியுள்ளது.
உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா (15.07 லட்சம்), ஸ்பெயின் (2.76 லட்சம்), ரஷ்யா (2.72 லட்சம்), பிரிட்டன் (2.40 லட்சம்) ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக தற்போது பிரேசில் உள்ளது குறிப்பிடத்தக்கது.