ஈராக் பிரதமர் பதவி விலகினார் ...
ஈராக்கில் அதிபர் பர்ஹம் சாலே கடந்த பிப்ரவரி 1-ம் தேதி புதிய பிரதமராக முகமது அல்லாவியை நியமித்தார்.
இந்நிலையில், ஈராக் பாராளுமன்றத்தில் பிரதமர் முகமது அல்லாவியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. அமைச்சரவைக்கான ஒப்புதலையும் அவரால் பெற முடியவில்லை. இதையடுத்து, முகமது அல்லாவி, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிபர், பாராளுமன்ற சபாநாயகர் ஆகியோருக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வரும் 15 நாட்களுக்குள் புதிய பிரதமரை, அதிபர் பர்ஹம் சாலே நியமிப்பார். அதன் பினனர் புதிய பிரதமர், 30 நாட்களுககுள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அமைச்சரவையின் ஒப்புதலையும் அவர் பெற வேண்டும்.