உலகம்
67 நாடுகளில் கொரோனா: உலகம் முழுவதும் 3,056 பேர் பலி...
67 நாடுகளில் கொரோனா: உலகம் முழுவதும் 3,056 பேர் பலி...
67 நாடுகளில் கொரோனா: உலகம் முழுவதும் 3,056 பேர் பலி...
சீனாவில் முதன் முதலில் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியது. மார்ச் 2 நிலவரப்படி, அங்கு நோய் தொற்றால் 2,943 பேர் உயிரிழந்துள்ளனர். 80,151 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 47,204 பேர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தென் கொரியாவில் 4,812 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், 67 நாடுகளில் 89,527 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், உலகம் முழுவதும் 3,056 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.