இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு… அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு… அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு… அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு

இலங்கை நாடாளுமன்றத்தின் பதவி காலம் முடிவடைய இன்னும் 6 மாதங்கள் இருக்கின்றன. எனினும் ஐந்தாண்டு காலத்தில் நான்கரை ஆண்டுகளை நிறைவு செய்த பிறகு, நாடாளுமன்றத்தை கலைக்க இலங்கையின் அரசியலமைப்பு அதிகாரம் அளிக்கிறது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். 

இதையடுத்து இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 25 அன்று நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேட்பு மனு தாக்கல் வரும் 12-ம் தேதி முதல் 19-ம் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தபய ராஜபக்சே கடந்த நவம்பரில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார்.  225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையாக உள்ளன. எனவே, தனக்கு அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் தாம் சுதந்திரமாக பணியாற்ற முடியவில்லை என்று கோத்தபய ராஜபக்சே கூறிவந்தார். 

அரசியலமைப்பில் எந்த மாற்றங்களையும் நிறைவேற்ற ராஜபக்சேவுக்கு மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் இப்போது நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்து தேர்தல் நடத்த வழிவகுத்திருக்கிறார் கோத்தபய ராஜபக்சே.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com