ஆக்ஸ்போர்டு அருங்காட்சியகத்தில் உள்ள வெண்கல சிலையை திருப்பி தரும்படி இந்தியா கோரிக்கை....

கும்பகோணத்தில் அருகில் உள்ள சுந்தரப்பெருமாள் கோயில் கிராமத்தில் உள்ள சுந்தரப்பெருமாள் கோயிலில் இருந்த திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிலை மாற்றப்பட்டு, பழமையான சிலை லண்டன் ஆக்ஸ்போர்டில் உள்ள ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்திற்கு விற்பனைச் செய்யப்பட்டத்தை தமிழக சிலை கடத்தல் பிரிவினர் சமீபத்தில் கண்டுபிடித்தனர். இந்த சிலை கிட்டத்தட்ட 54 ஆண்டுகளுக்கு முன்பாக மாற்றி இருக்க கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. 

லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள இந்த சிலை பற்றிய குறிப்பில், 57.5 சென்டி மீட்டர் உயரம் உள்ள வெண்கலத்தில் செய்யப்பட்ட இந்த சிலை 15ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், கையில் கத்தியும், கேடயமும் கொண்டிருக்கும் திருமங்கையாழ்வாரின் இந்த திருவுருவம் தமிழ்தொடர் ஆண்டு 5067ல் (1967) வாங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து தற்போது இந்தியத் தூதரகத்தின் மூலம் சிலையை மீட்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக கடந்த வெள்ளிக்கிழமை இந்திய அரசு ஷ்மோலியன் அருங்காட்சியகத்திடம் திருமங்கையாழ்வாரின் சிலையை திரும்பி தரும்படி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பான கடிதம் முறைப்படி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்