காதல் ஆசை யாரை விட்டதோ.. காதலிக்காக கட்டை விரலை இழந்த நபர்..!

மிச்சிகனில் உள்ள கார்சன் நகரத்தை சேர்ந்த ஐடன் அட்கின்ஸ் தனது காதலிக்கு அழகான ஒரு பரிசளிக்க விரும்பினார்.  அதனால் தனது கையினாலேயே மரப்பொம்மை ஒன்றை செய்து பரிசளிக்க திட்டமிட்டார். பொம்மையை முழுவதுமாக செதுக்கி முடிக்கும் போது தான் அந்த விபரீதம் நடந்தது. தீவிர வேலையில் இருந்த போது மரத்துண்டுகள் பறந்து விழுந்தது. அதனுடன் அவரது கை கட்டை விரலும் பறந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஐடன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கட்டை விரலை கொண்டு வந்தால் மீண்டும் பொருத்தி விடலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் எவ்வளவு தேடியும் கட்டை விரலை கண்டுபிடிக்க முடியவில்லை. கட்டை விரல் இல்லாததால் மனம் தளர்ந்த ஐடனுக்கு மருத்துவர்கள் ஒரு மாற்று வழியை கூறினர்.

அதன்படி, அவரது இடது காலில் கட்டை விரலுக்கு அடுத்து இருந்த விரலை அகற்றி, அவரது கட்டை விரல் இருந்த இடத்தில் மருத்துவர்கள் பொருத்தினர். இந்த விரல் மாற்று அறுவை சிகிச்சையால் ஐடன் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

  • வரவேற்கத்தக்கது
  • கட்சிகளுக்கு நல்லதல்ல
  • அதிருப்தி
  • கருத்து சொல்ல விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்