ரஷ்யாவில் இருந்து தாய்லாந்து நோக்கி சென்ற விமானத்தில் மதுபோதையில் இருந்த பயணி ஒருவர் அங்கிருந்த அனைவரையும் கலங்க வைத்துள்ளார்.
ரஷ்யாவில் இருந்து தாய்லாந்து நோக்கி சென்ற விமானத்தில் மதுபோதையில் இருந்த பயணி ஒருவர் அங்கிருந்த அனைவரையும் கலங்க வைத்துள்ளார். விமானத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்படும் சமயங்களில் அவசரமாக வெளியேறுவதற்காக இருக்கும் கதவை திறக்க அந்த பயணி முயற்சி செய்துள்ளார். இதனை கண்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
அங்கே இருந்தவர்கள் எவ்வளவு முயன்றும் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை. பிளாஸ்டிக் கயிறு உள்ளிட்டவற்றை வைத்து அவரை கட்டிப் போட முயற்சி செய்துள்ளனர். எவ்வளவு போராடியும் பலன் கிடைக்கவில்லை. இறுதியாக உஸ்பெகிஸ்தான் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கி உள்ளனர். இதனால் மற்ற பயணிகள் மிகவும் பாதிப்படைந்தனர்.