வாட்ஸ் அப்பில் வந்த புது அப்டேட் என்னவென்று தெரியுமா?

யூடிபைப் போன்று இனி வாட்ஸ் அப்பிலும் சேனல்களைப் பார்க்கலாம்.... வந்துவிட்டது புதிய அப்டேட்.
வாட்ஸ் அப் சேனல்ஸ்
வாட்ஸ் அப் சேனல்ஸ்

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலி உலகம் முழுவதும் பல்வேறு தரப்பட்ட மக்களால் உபகோயப்படுத்தப்படுகிறது. இதனால் பயனடைபவர்கள் ஏராளம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கல்வி, தொழில், நிர்வாகம் சார்ந்த விஷயங்களுக்கு பக்கபலமாக இருந்து உதவுகிறது வாட்ஸ் அப். சமீபகாலமாக வாட்ஸ் அப்பில் இருந்து அப்டேட்கள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகின்றன.

வாட்ஸ் அப் புது அப்டேட்
வாட்ஸ் அப் புது அப்டேட்

தற்போதும் கூட ஒரு அப்டேட் வந்துள்ளது. வாட்ஸ் அப்பில் "சேனல்ஸ்" என்ற புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் தரப்பில் இருந்து வரும் அதிகாரப்பூர்வ தகவல்களை உடனடியாக அறிந்துகொள்ள இந்த புதிய அப்டேட் உதவும் என்று சொல்லப்படுகிறது.

மெட்டா நிறுவனம் சேனல்ஸ் என்ற அப்டேட்டை 150 நாடுகளுக்கு அறிமுகம் செய்துள்ளது. பயனர்கள் விருப்பத்தின் பெயரில் அந்த சேனல்களை தேர்வு செய்யலாம். இந்த சேனல்ஸ் அப்டேட்களை பயன்படுத்தி பொழுதுபோக்குகள், விளையாட்டு ரீதியான தகவல்கள், உள்ளூர் செய்திகள் உள்ளிட்டவற்றை விருப்பத்தின் பெயரில் பயனாளர்கள் தேர்வு செய்யலாம்.

வாட்ஸ் அப் சேனல்ஸ்
வாட்ஸ் அப் சேனல்ஸ்

இந்த புதிய அம்சத்தினால் தனிநபரின் மொபைல் எண், புகைப்படம், பிற தகவல்கள் எதுவும் ஃபாலோவர்ஸ்களுக்கு காட்டப்படாது. அதேபோல் அட்மின் மற்றும் பிற பயனாளிகளுக்கு தனிநபர் தொலைபேசி எண் உள்ளிட்ட சுயவிவரம் வெளியிடப்படமாட்டாது என்று சொல்லப்படுகிறது. வாட்ஸ் அப்பில் வந்துள்ள இந்த புதிய அப்டேட் சேனல் ஹிஸ்டரியை 30 நாட்கள் வரை சேமித்து வைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய அப்டேட் பலருக்கும் உபயோகமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com