ஆழ்கடலில் பிரம்மாண்ட கல்லறை போல காட்சியளிக்கும் டைட்டானிக் கப்பல் - டிஜிட்டல் ஸ்கேன்களை வெளியிட்ட விஞ்ஞானிகள்

1985ல் இருந்தே டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை கண்டு பிடித்து விரிவான ஆய்வு விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், இந்த அளவு துல்லியமாக டிஜிட்டல் ஸ்கேனில் ஈடுபடுவது இதுவே முதன்முறை
ஆழ்கடலில் பிரம்மாண்ட கல்லறை போல காட்சியளிக்கும் டைட்டானிக் கப்பல் - டிஜிட்டல் ஸ்கேன்களை வெளியிட்ட விஞ்ஞானிகள்

அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் தற்போதைய நிலைகுறித்த புதிய டிஜிட்டல் ஸ்கேன் புகைப்படங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

1912 ஆம் ஆண்டில் டைட்டானிக் கப்பலானது பனிப்பாறை மீது மோதி அட்லாண்டிக் கடலுக்குள் சுமார் 12 ஆயிரத்து 500 அடியில் அதாவது 3,800 மீட்டர் ஆழத்தில் மூழ்கியது. இதில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் மூழ்கி இறந்துள்ளனர். இக்கப்பலின் புதிய டிஜிட்டல் ஸ்கேன்கள் தற்போது அதை ஆய்வு செய்த விஞ்ஞானிகளால் வெளியிடப்பட்டுள்ளது. .

“டீப் – சீ மப்பிங்” (Deep-Sea mapping) என்ற நிறுவனமான மாகெல்லன், லண்டனில் இருக்கும் அட்லாண்டிக் புரொடகிஷன்ஸ் என்ற நிறுவனத்துடன் சேர்ந்து இந்த ஸ்கேனிங் பணியைத் தொடங்கியது. 1985ல் இருந்தே டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை கண்டு பிடித்து விரிவான ஆய்வு விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், இந்த அளவு துல்லியமாக டிஜிட்டல் ஸ்கேனில் ஈடுபடுவது இதுவே முதன்முறை ஆகும்.

இவ்விரண்டு நிறுவனமும் இணைந்து தொண்டங்கிய ஸ்கேனிங் பணியின் போது ஒவ்வொரு கோணத்திலும் இருந்து 7 லட்சத்திற்க்கும் அதிகமான படங்களை அக்குழு எடுத்துள்ளது. ஸ்கேனிங் வீடியோக்களும் இந்த ஆய்வில் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்த டைட்டானிக் கப்பலின் துல்லியமான 3டி வடிவத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளது அந்நிறுவனங்கள். இதன் மூலம் டைட்டானிக் கப்பல் ஏன் மூழ்கியது உள்ளிட்ட ரகசியத்திற்கு விடை கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் 1985 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து அந்த கப்பல் விரிவாக ஆராயப்பட்டு வரும் நிலையில், கடலின் ஆழமான பகுதியில் இருளான இடத்தில் காணப்படும் டைட்டானிக் கப்பலின் சில பகுதிகளை மட்டும் நமக்கு கேமராக்கள் படம்பிடித்து காட்டியுள்ளன. ஆனால் இந்த ஸ்கேனிங் புகைப்படங்களும், வீடியோக்களும் டைட்டானிக் கப்பலின் தெளிவான தோற்றத்தையே நம் கண்முன் நிறுத்தியுள்ளன. இந்த தோற்றம் பிரம்மாண்ட கல்லறை போல காட்சியளிக்கிறது.

முப்பரிமாண வீடியோ குறித்து டைட்டானிக் ஆய்வாளர் பார்க்ஸ் ஸ்டீபன்சன் கூறுகையில், “கப்பலைப் பற்றி இன்னும் பல அடிப்படை கேள்விகள் உள்ளன, அவை பதிலளிக்கப்பட வேண்டும். இந்த ஸ்கேனிங் படங்கள் டைட்டானிக் விபத்தை ஆதார அடிப்படையிலான ஆராய்ச்சியை நோக்கி நகர்த்துவதற்கான முதல் முக்கியப் படிகளில் ஒன்றாகும். இவை ஊகங்கள் அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

- கோபிகா ஸ்ரீ

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com