'இனி எடிட் செய்யலாம்'- WhatsApp கொண்டு வந்த சூப்பர் அப்டேட்

வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிய 15 நிமிடங்களுக்குள் மெசேஜை எடிட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
'இனி எடிட் செய்யலாம்'- WhatsApp கொண்டு வந்த சூப்பர் அப்டேட்

வாட்ஸ்அப் இல் அனுப்பிய மெசேஜ்யை எடிட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அனுப்பிய 15 நிமிடங்களுக்குள் மட்டுமே மெசேஜை எடிட் செய்ய முடியும் என அந்நிறுவனத்தன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்தும் பலரும் வாட்ஸ்அப் பயன்படுத்தாமல் இருக்கமாட்டார்கள். மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இந்த வாட்ஸ்அப் செயலி பல்வேறு தரப்பு பயனர்களைத் தன்வசம் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ்அப்க்கு பயனர்களாக உள்ளார்கள். இளைஞர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை வாட்ஸ்அப்பை பயன்படுத்துகின்றனர்.இந்த வாட்ஸ்அப் பிறருடன் தகவல்களை எளிதில் பகிர்ந்துக் கொள்ளவும், பயனர்கள் விரும்பும் பல முக்கிய அம்சங்களையும் கொண்டுள்ளது. ஆடியோ, வீடியோ காலிங் வசதி, ஸ்டேட்டஸ் அப்டேட், மெசேஜிங் வசதி, குரூப் சேட் எனப் பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது. மேலும் பல்வேறு புதிய வசதிகளை பயனர்களின் வசதிக்கு ஏற்ப தொடர்ந்து அப்டேட் செய்தும் வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் 'லாக் சாட்' (Lock Chat) என்ற புதிய அம்சம் வரப்போவதாய் வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்தது.

அந்த வகையில் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிய 15 நிமிடங்களுக்குள் மெசேஜை எடிட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி முதலில் betta வெர்சனாக சோதனை செய்யப்பபட்டு வந்த நிலையில், இனி உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு கிடைக்கும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது வரும் வாரங்களில் அனைவருக்கும் கிடைக்கும் என்று மெட்டா நிறுவனரும், அந்நிறுவனத்தன் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்துவது எப்படி?

பொதுவாக யாருக்காவது தவறான மெசேஜ் அனுப்பிவிட்டால், delete for every one கொடுத்து அதனை அழித்துவிடுவது வழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த புதிய அப்டேட் தவறான மெசேஜை திருத்துவதற்கான வசதிகளைக் கொண்டுள்ளது. நீங்கள் மெசேஜ் அனுப்பிய பின் அதை திருத்த நினைத்தால், அதை கொஞ்சம் நேரம் கையை வைத்து அழுத்துங்கள். அதாவது லாங்பிரஸ் செய்தால், திருத்து என்ற ஆப்சன் வரும். அதை தேர்ந்தெடுத்து மெசேஜை திருத்திக் கொள்ள முடியும். ஆனால் 15 நிமிடங்கள் வரை தான் அதற்கு அனுமதி, அதற்குள் திருத்திக் கொள்ள வேண்டும். வாட்ஸ்அப்பில் அனுப்பும் மெசேஜ்களில் எழுத்துப்பிழைகளை சரி செய்ய மக்களுக்கு இந்த வசதி நிச்சயம் உதவும். அதேசமயம் திருத்தப்பட்ட செய்தி என்பது மெசேஜை நாம் யாருக்கு அனுப்புகிறோமோ அவர்களுக்கும் தெரியும்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com