பூமிக்கும் மேல் ஒரு லட்சம் அடி உயரத்திற்கு சென்று விண்வெளியில் திருமணம் செய்து கொள்ளும் வசதியை தனியார் நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தது. அதை மறக்கமுடியாத கொண்டாட்டமாக மாற்ற பலரும் பல இலட்சங்கள், கோடிகள் செலவழிகின்றனர். திருமணம் நடக்கும் இடம், உணவு, மணமக்கள் ஆடைகள், அலங்கரிப்புகள் உள்ளிட்டவைகளை விலைமதிப்புள்ளதாக தேர்வு செய்கிறார்கள். வித்யாசமாக எதையேனும் செய்து திருமணத்தை மறக்க முடியாத தருணமாக மாற்ற முற்படுவார்கள்.
உதாரணாமாக விமானத்தில் திருமணம் , கப்பலில் திருமணம், தண்ணீர் அடியில் திருமணம் என திருமணத்தை மறக்கமுடியாத நிகழ்வாக மாற்றிவிடுவர். இதன் அடுத்தகட்டமாக பூமிக்கு மேல் விண்வெளியில் திருமணம் செய்து வைக்க ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் என்ற தனியார் நிறுவனம் முன்வந்துள்ளது. அதற்காக திருமணம் செய்து கொள்ள நபர் ஒருவருக்கு 1 கோடி ரூபாயை கட்டணமாக நிர்ணயித்துள்ளது.
இந்த நிறுவனம் திருமணம் செய்ய இருக்கும் ஜோடிகளை கார்பன் நியூட்ரஸ் ராட்சத பலூன் மூலம் விண்வெளிக்கு அனுப்புகிறது. பூமிக்கு மேல் ஒரு லட்சம் அடி உயரத்திற்கு சென்றதும், திருமண ஜோடிகள் பூமியின் அழகை ரசித்தபடியே திருமணம் செய்து கொள்ளலாம். திருமணம் செய்த பின் இவர்கள் பூமிக்கே திருப்பி அனுப்பபடுவார்கள்.
இந்த நிறுவனத்தின் கீழ் விண்வெளியில் திருமணம் செய்து கொள்ள இதுவரை 1000 பேர் முன்பதிவு செய்து உள்ளார்கள். கற்பனையில் மட்டும் சாத்தியமாகி இருந்த விண்வெளி திருமணம் இன்று நிஜத்திலும் சாத்தியமாகும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது