வால் நட்சத்திரத்தை சுற்றி நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு - விஞ்ஞானிகள் தகவல்

238P/Read என்ற வால் நட்சத்திரம் சூரியனை நெருங்கும்போது நீராவி மேகத்தை உருவாக்குவதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வால் நட்சத்திரத்தை சுற்றி நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு - விஞ்ஞானிகள் தகவல்

வால் நட்சத்திரத்தில் நீர் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பூமியில் தண்ணீர் தேடி அலையும் மக்கள் ஒருபுறம் இருக்க, விஞ்ஞானிகள் பலரும் விண்வெளியில் உள்ள மற்ற கோள்களில் தண்ணீர் உள்ளதா என தேடி வருகின்றனர். ’நீரின்றி அமையாது உலகு’. இதற்கேற்றவாறே நமது பூமியும் 71 சதவீதம் நீரால் ஆனது. மீதம் உள்ள 29 சதவீதத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இவ்வளவு நீர் இருந்தாலும் அதை நம்மால் பயன்படுத்த இயலாது. ஏனெனில் அதில் ஏறத்தாழ 97 சதவீதம் கடல் நீர். 2 சதவீதம் பனிப்பாறை. மீதம் உள்ள 1 சதவீதம் மட்டுமே நாம் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் நன்னீர். ஆனால், இவற்றை கூட நாம் பாதுகாப்பதிலிருந்து தவறிவிட்டோம். தற்போது அதீத வெப்பச்சலனம் காரணமாக பனிப்பாறைகளும் உருகத்தொடங்கி விட்டது.

பூமியில் பலரும் அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் அல்லாடி வரும் நிலையில், விஞ்ஞானிகள் நீரை விண்வெளியில் தேட ஆரம்பித்துவிட்டனர். UNICEF (United Nations International Children’s Emergency Fund) என்ற நிறுவனத்தின் ஆய்வின் படி, 2040 ஆம் ஆண்டு தோராயமாக உலகம் முழுவதும் இருக்கும் குழந்தைகளில் நான்கில் ஒரு குழந்தை (4:1) அதீத நீர் வறட்சி உள்ள பகுதியில் வாழ நேரிடும் என்று கூறப்பட்டுள்ளது.

எப்படியும் இன்னும் சில ஆண்டுகளில் தண்ணீர் தட்டுபாடு பல நாட்டை உலுக்கும் என்று தெரிந்த பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் விண்வெளியில் நீரைத்தேடி தேடுதல் வேட்டையை தொடங்கி விட்டனர். இதன் முதல் வெற்றியாக நாசா (NASA) நிறுவனம் 2009 ஆம் ஆண்டு சந்திராயன் – 1 என்ற செயற்கைகோள் மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பதை கண்டு பிடித்தனர். அதில் மேற்கொள்ளப்பட்ட நுண்ணிய ஆராய்ச்சியால் 2020 ஆம் ஆண்டு சோபியா (SOFIA) என்ற செயல் இலக்கு மூலம் நிலாவில் நீர் இருப்பதை உறுதிபடுத்தியது நாசா.

இந்நிலையில் இதுவரை நடந்த ஆராய்ச்சியில் ஒரு முதல் திருப்பமாக தற்போது ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் (James Webb Space Telescope) விண்வெளியில் ஒரு வால் நட்சத்திரத்தைச் சுற்றி நீர் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 238P/Read என்ற வால் நட்சத்திரம் சூரியனை நெருங்கும்போது நீராவி மேகத்தை உருவாக்குவதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

-கோபிகா ஸ்ரீ

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com