ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பொறுப்பிலிருந்து விலகும் எலான் மஸ்க் - 6 வாரங்களில் பதவியேற்கும் புதிய சி.இ.ஓ

”ட்விட்டருக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமித்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 6 வாரங்களில் பணியை தொடங்குவார்” என குறிப்பிட்டுள்ளார்
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பொறுப்பிலிருந்து விலகும் எலான் மஸ்க் - 6 வாரங்களில் பதவியேற்கும் புதிய சி.இ.ஓ

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுகிறார் எலான் மஸ்க். இந்நிலையில் ட்விட்டருக்கு புதிய தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்து விட்டதாகவும் அவர் 6 வாரங்களில் பதவியேற்பார் எனவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், தலைமை பொறுப்பை வகித்து வந்தார். அந்த நிறுவனத்தில் பல அதிரடி மாற்றங்களை செய்து வந்த எலான் மஸ்க் தலைமை பொறுப்பை தொடர்ந்து வகிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து தன்னை பின்பற்றும் 12.2 கோடி பேரிடம் வாக்கெடுப்பு ஒன்றையும் நடத்தினார். வாக்கெடுப்பின் முடிவுக்கு கட்டுப்படுவதாகவும் அவர் உறுதி கூறியிருந்த நிலையில், பெரும்பாலானோர் பொறுப்பில் இருந்து விலகலாம் என வாக்களித்திருந்தனர். இதையடுத்து சிஇஓ பதவிக்கு முட்டாள் ஒருவரை கண்டுபிடித்த பிறகு, விரைவில் தலைமை பதவியில் இருந்து விலகுவேன் என தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி அமரும் இருக்கையில் ஒரு நாய் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ’ஃப்ளோக்கி’என்ற அந்த நாயை புதிய தலைமை அதிகாரியாக அறிவித்தார். அதுமட்டுமில்லாமல் ட்விட்டரின் லோகோவான நீலநிறக்குருவியை மாற்றி நாயின் படம் வைக்கப்பட்டது. பின் மீண்டும் நீலநிறக்குருவியே மாற்றப்பட்டது.

இந்நிலையில் புதிய ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியை தேர்வு செய்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”ட்விட்டருக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமித்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 6 வாரங்களில் பணியை தொடங்குவார்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் தயாரிப்பு, மென்பொருள் மற்றும் சிஸ்டம் ஆபரேட்களை மேற்பார்வையிடும், நிர்வாகத் தலைவர் & சிடிஓ ஆக எனது பங்களிப்பு மாறும்" என்றும் அதில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com