குறைந்த விலையில் ஆன்லைனில் உணவா? - zomato,swiggy-க்கு டஃப் கொடுக்கும் மத்திய அரசின் ONDC செயலி

இடைத்தரகர் கமிஷன் இல்லாததால் மிக மலிவு விலையில் உணவு பொருட்களை வாங்க முடியும்.
குறைந்த விலையில் ஆன்லைனில் உணவா? - zomato,swiggy-க்கு டஃப் கொடுக்கும் மத்திய அரசின் ONDC செயலி

உணவு விநியோக நிறுவனத்தில் சொமட்டோ, ஸ்விகி நிறுவனங்களுக்கு போட்டியாக மத்திய அரசின் ONDC செயலி களமிறங்கியுள்ளது.

நாம் வாழும் நவீன உலகில் இன்று வர்த்தகத்திற்காக பலரும் இணையத்தளத்தையும் ஆன்லைன் செயலிகளையும் நம்பியுள்ளனர். பயணங்கள் தொடங்கி வங்கி பரிவர்த்தனை, பொருட்கள் வாங்குதல், உணவு ஆர்டர் செய்தல் என அனைத்தையுமே இருக்கின்ற இடத்திலேயே ஆன்லைன் மூலம் செய்து முடித்து விடுகின்றனர். வீட்டில் சமைக்கவில்லை என்றால் உணவகங்களுக்கு போன காலங்கள் மாறி, இன்று இருக்கின்ற இடத்திற்கு உணவை ஆர்டர் செய்து வரவைப்பது வழக்கமாகி விட்டது. அந்த வகையில் உணவு விநியோகத்திற்காக பலரும் பயன்படுத்துவது Zomato, Swiggy ஆகிய செயலிகளை தான். இதற்கு போட்டியாக ONDC என்ற உணவு செயலியை மத்திய அரசு 2021 டிசம்பரில் தொடங்கியது.

லாப நோக்கம் இல்லாமல் செயல்படும் இதன் மூலம் மலிவான விலையில் உணவு பொருட்களை நாம் ஆர்டர் செய்ய முடியும். தனி செயலியாக இல்லாமல் பேடிஎம், ஃபோன்பே போன்ற பணபரிவர்த்தனை செயலிகளுடனும் சேர்த்து பயன்படுத்த ஏதுவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Zomato, Swiggy போல அல்லாமல் உணவகங்கள் ONDC ஆப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய முடியும். இடைத்தரகர் கமிஷன் இல்லாததால் மிக மலிவு விலையில் உணவு பொருட்களை வாங்க முடியும்.

உதரணமாக பன்னீர் தந்தூரி பர்க்கரின் விலை zomato,swiggy-ல் ரூ. 359க்கு விற்க்கப்படும் நிலையில் ONDC-ல் ரூ.270க்கு கிடைக்கிறது. தற்போது தினமும் 10,000 ஆர்டர்கள் இதன்மூலம் நடைபெறுகின்றன. ஆடைகள், புத்தகங்கள், மளிகை பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவற்றையும் ONDC மூலம் வாங்க முடியும்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com