டுவிட்டர் நிறுவனத்தை விற்கும் எலான் மஸ்க் - என்ன காரணம்?

டுவிட்டர் நிறுவனத்தை விற்கும் எலான் மஸ்க் - என்ன காரணம்?
டுவிட்டர் நிறுவனத்தை விற்கும் எலான் மஸ்க் - என்ன காரணம்?

டுவிட்டரை இயக்குவது ‘மிகவும் வேதனையானது’ மற்றும் ‘ஒரு ரோலர் கோஸ்டர்’ போன்றது

உலகப்பணக்காரர்களில் ஒருவரும் டுவிட்டர் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், டுவிட்டரை இயக்குவது "மிகவும் வேதனையானது" மற்றும் "ஒரு ரோலர் கோஸ்டர்" போன்றது என கூறியுள்ளார். 
எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். இதனிடையிலே ஆட்குறைப்பு, 'ப்ளூ டிக்' வசதிக்கு கட்டணம் போன்ற முடிவுகள் சர்வதேச அளவில் சர்ச்சையை கிளப்பியபோதும் எலான் மஸ்க் அதில் இருந்து பின்வாங்கவில்லை. 
சமீபத்தில்கூட  டுவிட்டரின் 'லோகோ' வான நீலநிற குருவியை மாற்றி  ஜப்பானின் முக்கிய நாய் இனமான 'ஷிபு' இன நாயின் புகைப்படத்தை புதிய 'லோகோ'வாக வைத்தார். இந்த மாற்றம் பயனாளர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அந்த லோகோ மாற்றப்பட்டு, மீண்டும் நீலநிற குருவியே வைக்கப்பட்டது.
இவ்வாறு சமூக வலைதளங்களில் பரபரப்பைக் காட்டி வரும் எலான் மஸ்க் தற்போது டுவிட்டர் நிறுவனத்தை விற்க போவதாய் மற்றுமொரு அதிரடி தகவலை கொடுத்துள்ளார். டுவிட்டர், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும் உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் இப்படி கூறி உள்ளது அதிர்ச்சி தரும் தகவலாக அமைந்துள்ளது. இவரின் இந்த அதிர்ச்சி முடிவு இப்போது டுவிட்டர் நிறுவனத்தை விற்கும் முடிவு எடுப்பது ஏன்? என்று அனைவருக்கும் கேள்வி எழுப்பி உள்ளது.
முன்னணி செய்தி நிறுவனமான பி.பி.சி-க்கு எலான் மஸ்க் அளித்த பேட்டியில், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் அதன் தற்போதைய நிலவரம் வரை அனைத்தையும் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், ”டுவிட்டரை வாங்கியது ஒரு சரியான முடிவு என்று நான் கருதினாலும், கடந்த சில மாதங்களாக நான் மிகவும் அழுத்தமாக உணர்கிறேன், பணிச்சுமையால் நான் சில நேரங்களில் அலுவலகத்தில் தூங்குகிறேன், சரியான நபரைக் கண்டுபிடித்தால் தனது டுவிட்டர் நிறுவனத்தை விற்பேன் ” என்று கூறியுள்ளார்.
இதனிடையே அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலக கட்டிடத்தில் பொறிக்கப்பட்டுள்ள டுவிட்டர் பெயர்ப் பலகையில்,  டுவிட்டரின் பெயரில் உள்ள 'டபிள்யூ (W)'என்ற  எழுத்து மறைக்கப்பட்டு  டிட்டர் என்று  காட்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com