சைபர் கிரைம்களைத் தடுக்க புதிய முயற்சி; ‘ட்ரூகாலர் செயலி’ நிறுவனத்துடன் டெல்லி காவல்துறை ஒப்பந்தம்

சைபர் கிரைம்களைத் தடுக்க புதிய முயற்சி; ‘ட்ரூகாலர் செயலி’ நிறுவனத்துடன் டெல்லி காவல்துறை ஒப்பந்தம்
 சைபர் கிரைம்களைத் தடுக்க புதிய முயற்சி;  ‘ட்ரூகாலர் செயலி’ நிறுவனத்துடன் டெல்லி காவல்துறை ஒப்பந்தம்

புகார்களின் அடிப்படையில் டெல்லி காவல்துறையால் வழங்கப்பட்ட தொலைபேசி எண்களை இனி ட்ரூகாலர் செயலி காண்பிக்கும்

சைபர் கிரைம்களைத் தடுக்கும் வகையில் ‘ட்ரூகாலர் செயலி’ நிறுவனத்துடன் டெல்லி காவல்துறை ஒப்பந்தம் செய்துள்ளது. 

வளர்ந்து வரும் தகவல் தொழிநுட்பம் பல்வேறு வளர்ச்சிக்கு வித்திட்டாலும், குற்றங்களும் இதன் வாயிலாக நிகழ்கின்றன. இதனைத் தடுக்க ’முள்ளை முள்ளால் எடு’என்பதற்கிணங்க இணையவழி மோசடி போன்ற குற்றங்களைத் தடுக்க  ‘ட்ரூகாலர் செயலி’நிறுவனத்துடன் டெல்லி காவல்துறை ஒப்பந்தம் செய்துள்ளது. 

இது குறித்து டெல்லி காவல்துறை சிறப்பு ஆணையர் சஞ்சய் சிங் கூறியதாவது, ட்ரூகாலர் செயலி ஒரு ஐடி சரிபார்ப்பு தளமாகும். தற்போது இணைய வழி மோசடிகள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. அதிலும் செல்போன் மூலமாக இணைய வழி மோசடிகள் மிக அதிக அளவில் நடைபெறுகின்றன. அதனை கட்டுப்படுத்தும் விதமாக ட்ரூகாலர் செயலியுடன் டெல்லி காவல்துறை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி, துன்புறுத்தல் மோசடி அல்லது பிற பதிவு செய்யப்பட்ட சிக்கல்கள் தொடர்பான புகார்களின் அடிப்படையில்  டெல்லி காவல்துறையால் வழங்கப்பட்ட தொலைபேசி எண்களை இனி ட்ரூகாலர் செயலி காண்பிக்கும். டெல்லிவாசிகள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், இந்த எண்கள் செயலியில் இருந்தால் அவர்களை எச்சரிக்கவும் முடியும்.

முன்னதாக, கோவிட் தொற்றுநோய்களின் போது, ​​ஆக்சிஜன் சிலிண்டர்கள், செறிவூட்டிகள், மருந்துகள் மற்றும் வைரஸுக்கு சிகிச்சையுடன் தொடர்புடைய பிற அத்தியாவசியப் பொருட்களை விற்பது என்ற சாக்குப்போக்கில் ஏராளமான மோசடிகள் பதிவாகியதில்,  ‘ட்ரூகாலர் செயலி’காவல்துறைக்கு உதவியுள்ளது.

எந்த வித புகாரிலும் சிக்காத உண்மையான அழைப்பாளர்களுக்கு பச்சை பேட்ஜ் மற்றும் நீல டிக் வழங்கப்பட்டு இவர்களுக்கு அரசாங்க பேட்ஜூம் வழங்கப்படும். மேலும், செல்போனில் மோசடி அழைப்புகள் வந்ததுமே எச்சரிக்கை அறிவிப்பு வரும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com