கம்ப்யூட்டரில் ட்விட்டரை லாகின் செய்யும்போது 'Error' என்றே வருகிறது. இதனால் உலக அளவில் ஏராளமானோர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க் உலகின் முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரை கடந்த சில மாதங்களுக்கு முன் வாங்கினார்.
ட்விட்டரை வாங்கியதும் அதில் ஏராளமான மாற்றங்களை செய்தார். ஏராளமான ஊழியர்களை பணியில் இருந்து நீக்கினார்.
ட்விட்டர் புளூ டிக் விவகாரம், போலிக் கணக்குகள் நீக்கம் உள்ளிட்டவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பிரபல செய்தி நிறுவன செய்தியாளர்களின் கணக்குகளையும் அவர் முடக்கினார்.
இவ்வாறு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து சர்ச்சை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று கம்ப்யூட்டரில் ட்விட்டரை லாக்கின் செய்ய முடியவில்லை பயனாளர்கள் போது குற்றம்சாட்டுகின்றனர்.
கம்ப்யூட்டரில் ட்விட்டரை லாகின் செய்யும்போது பயனாளர்களுக்கு 'Error' என்றே வருவதாக குற்றாச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் உலக அளவில் ஏராளமான பயனாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.