இணையவழி மோசடியில் இழந்த பணம் மீட்டு தரப்படும்...!

இணையவழி மோசடியில் இழந்த பணம் மீட்டு தரப்படும்...!

கடந்த ஒன்றரை ஆண்டில் பொதுமக்கள் சைபர் க்ரைம் மோசடியில் 175 கோடி ரூபாய் இழந்துள்ளனர் என சைபர் க்ரைம் எஸ்.பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சைபர் க்ரைம் எஸ்.பி ஸ்டாலின், "இணையவழி குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தாண்டு செப்டம்பர் 18-ம் தேதி வரை 62,767 சைபர் க்ரைம் புகார்கள் வந்துள்ளன. இந்த மோசடியில் ஈடுபட்டதாக 486 குற்றவாளிகளை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் பொதுமக்கள் சைபர் மோசடியில் சிக்கி 175 கோடியே 19 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் இழந்துள்ளனர். அதில் 33.45 கோடி ரூபாய் பணம் முடக்கப்பட்டு 9.8 கோடி ரூபாய் மீட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 30% பேர் பைனான்ஸ் ஸ்கேம் மூலம் பணத்தை இழந்துள்ளதாக புகார் அளித்துள்ளனர். இணையவழி மோசடியில் பணத்தை இழந்தோர் உடனடியாக 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற ஹெல்ப்லைனை தொடர்பு கொள்ளலாம். உடனே இழந்த பணம் மீட்டு தரப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.31%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.17%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்