வருது பறக்கும் பைக்: விலை ரூ. 6.20 கோடி

வருது பறக்கும் பைக்: விலை ரூ. 6.20 கோடி
உலகின் முதல் பறக்கும் பைக்கை அமெரிக்க வாகன கண்காட்சியில் ஜப்பானிய நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜப்பானை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஏர்வின்ஸ் உருவாக்கியுள்ள இந்த பறக்கும் பைக் டெட்ராய்ட் பகுதியில் நடக்கும் வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. ட்ரோன் போன்ற வடிவமைப்பிலான பறக்கும் தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பைக் தொடர்ந்து 40 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் கொண்டது. மணிக்கு 99 கி.மீ., வேகத்தில் பறக்கும்.

ஜப்பானில் இந்த பைக் விற்பனை தொடங்கி விட்டதாகவும், இப்பைக்கின் சிறிய அளவை 2023 - ல் அமெரிக்காவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகவும், இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.6.20 கோடி எனவும் ஏர்வின்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.64%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    16.99%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.38%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்