சரிவு கண்ட பி.எஸ்.என்.எல்., நிறுவனம்...!

சரிவு கண்ட பி.எஸ்.என்.எல்., நிறுவனம்...!

தமிழகத்தில் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் முறையாக சேவை வழங்காததால், ஜூலை மாதத்தில் மொபைல் போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 2.4 லட்சமும், நாடு முழுதும் 8.19 லட்சமும் சரிந்துள்ளது.

இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்துவோரின் விபரங்களை, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' மாதம்தோறும் வெளியிடும். தற்போது, ஜூலை மாதத்திற்கான விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.அதன்படி, தமிழகத்தில் பி.எஸ்.என்.எல்., மொபைல் சேவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சரிந்துள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் ஜூன் மாதத்தில், பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் சேவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 98.51 லட்சமாக இருந்தது. இது, ஜூலை மாதம் 96.11 லட்சமாகக் குறைந்து உள்ளது.இதன்படி, ஜூலை மாதத்தில் மட்டும், 2.4 லட்சம் வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல்., சேவையிலிருந்து வெளியேறி உள்ளனர்.

தமிழகம் மட்டும் இல்லாமல் ஆந்திரா, கேரளா, புதுடில்லி, உத்தரப்பிரதேசம், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும், பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் எண்ணிக்கை சரிந்துள்ளது.நாடு முழுதும், 8.19 லட்சம் வாடிக்கையாளர்கள் வெளியேறி உள்ளனர். பி.எஸ்.என்.எல்., 'பிராட்பேண்ட்' சேவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2.52 கோடியாக உள்ளதாக, 'டிராய்' தெரிவித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.31%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.17%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்