திருப்பத்தூர்: ஏலச்சீட்டு விவகாரம் - இளைஞர் வெட்டிக் கொலை - அதிர்ச்சி பின்னணி?

கொலையில் ஈடுபட்ட மாணிக்கம் மற்றும் அவரது நண்பர் ராஜ்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்
திருப்பத்தூர்: ஏலச்சீட்டு விவகாரம் - இளைஞர் வெட்டிக் கொலை - அதிர்ச்சி பின்னணி?

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கீழ்மிட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகன் ஜெயபிரகாஷ் (20) பெரியவரிகம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், ஜெயபிரகாஷ் நேற்று இரவு கீழ்மிட்டாளம் பகுதியில் உள்ள தங்களுக்கு சொந்தமான மாட்டிற்கு உணவு வைக்க சென்றுள்ளார்.

அப்பொழுது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் ஜெயபிரகாஷை கழுத்து பகுதியில் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே ஜெயபிரகாஷ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

இது குறித்து, அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரிடம் ஜெயபிரகாஷின் உறவினர்கள் குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

அப்போது, திருப்பத்தூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் ஜெயபிரகாஷின் உறவினர்களிடம் சமாதானப்பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர்.

பேச்சுவார்த்தையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யப்படுவார் என உறுதியளித்தனர். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும், வேலூரிலிருந்து சாரா என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய், கொலை செய்யப்பட்டதில் மோப்பம் பிடித்து கொலை நடைப்பெற்ற இடத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடிச் சென்று, அங்குள்ள ஒரு கோவில் அருகே நின்றது.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் ஜெயபிரகாஷின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, பெரியவரிகம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகன் மாணிக்கம் என்பவருக்கும் ஜெயபிரகஷிக்கும் ஏலச்சீட்டு பணம் கட்டுவதில் தகராறு இருந்து வந்தது என தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி, கொலையில் ஈடுபட்ட மாணிக்கம் மற்றும் அவரது நண்பர் ராஜ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com