கன்னியாகுமரி மாவட்டம் தூதூர் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண். இவர், திருச்சியில் தங்கி படித்துக் கொண்டு இருந்தபோது மற்றொரு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் இரு மாணவிகளுக்கும் இடையே, தகாத உறவாக மாறியுள்ளது. இதையடுத்து இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து பேசி, பழகத் தொடங்கியுள்ளனர்.
இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த தூதூர் மாணவியின் பெற்றோர் உடனே தங்களது மகளை சொந்த ஊரான கன்னியாகுமாரிக்கு அழைத்துச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் தனது காதலியை பிரிந்து இருக்க முடியாமல் திருச்சி மாணவி தவித்துள்ளார். எனவே தனது காதலியை வீட்டிற்கே சென்று சந்தித்து பேசுவது என, முடிவெடுத்துள்ளார்.
அதன்படி திருச்சியில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்ற மாணவி அங்கு தனது காதலியின் வீட்டைத் தேடி கண்டுபிடித்து அவரிடம் பேச முயன்றுள்ளார். இதை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தனர்.
இதையடுத்து திருச்சி மாணவியை சாலையில் ஓடஓட விரட்டி தாக்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தகாத உறவில் மலர்ந்த காதலை கைவிட முடியாமல் காதலியை தேடிச்சென்று இளம்பெண் ஓடஓட விரட்டியடிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.