திருத்துறைப்பூண்டி அருகே ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே கொற்கை கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புயலிலின் போது அக்கட்டிடம் சேதம் அடைந்தது இதனைத் தொடர்ந்து, தற்போது அக் கட்டிடத்தினை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்ட உள்ள நிலையில் அந்த இடத்தை சக்திவேல் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து வருவாய்துறை சார்பில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டபோது திடீரென எதிர்பாராத நேரத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சக்திவேலின் மனைவி சாவித்திரி மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆக்கிரமைப்பை அகற்ற வந்ததால் பெண் தீக்குளித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.