பட்டுக்கோட்டை: தனக்குத்தானே பிரசவம் பார்த்து இறந்த தாயும் கொலை செய்யப்பட்ட சேயும்

பட்டுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தாயும், சேயும் உயிரிழப்பு
தாயும், சேயும் உயிரிழப்பு

தனக்கு தானே பிரசவம் பார்த்த தாயும், சேயும் உயிரிழந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்கார தெரு ஆற்றங்கரை பகுதியில் குடியிருந்து வருபவர் செந்தில்.இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வசந்தி (வயது 40). இவர்களுக்கு ஏற்கனவே மூன்று பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், ஆறாவதாக கர்ப்பம் தரித்த வசந்தி தனக்குத்தானே பிரசவம் பார்த்துள்ளார். பிறந்த குழந்தையை கழுத்தில் துணியால் இறுக்கிக்கொன்றுவிட்டு அந்த குழந்தையை பெயிண்ட் வாளியில் மூடி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரசவத்திற்கு பின்னர் வசந்திக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இயற்கைக்கு மாறான மரணம் என பட்டுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தாய் கொன்றாரா இல்லை தந்தை கொன்றாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தாய் இறந்தும், தந்தை விசாரணைக்கு அழைக்கு செல்லப்பட்டுள்ளதால் 5 குழந்தைகளும் என்ன செய்வது என்று அறியாமல் தவித்து வருகின்றனர்.

வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாயும், சேயும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com