ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டு வருகிறது கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி. இந்த கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு மாணவர்களான புவனேஷ், சார்லஸ், தீபக், சஞ்சய், கிஷோர் ஆகிய ஐந்து பேரும் நண்பர்கள்.
முதலாம் ஆண்டு படித்து வரும் இவர்களுக்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவது, அழகிய இடங்களுக்கு செல்வது, குறும்படம் எடுப்பது போன்ற பழக்கத்தில் ஈடுபட்டிருகிறார்கள். கிஷோர் எங்க ஊரில் விவசாய நிலம் நன்றாக பசுமையாக இருக்கும். அங்கு போய் குறும்படம் எடுக்கலாம், இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்கலாம் என்று ஐடியா கொடுத்திருக்கிறார்.
இதனை ஏற்ற நண்பர்கள் சேலம் மாவட்டம் சங்ககிரி பக்கமுள்ள சீரங்க கவுண்டம்பாளையத்துக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு ஒரு இடத்தில் கிணறு இருந்துள்ளது. முதலில் சஞ்சய் அறை குறை நீச்சல் தெரியும் என்ற நம்பிக்கையோடு கிணற்றில் தத்தளித்துள்ளார். அவர் கிணற்றில் தத்தளிப்பதை பார்த்த தீபக் கிணற்றல் குதித்து காப்பாற்ற முயன்றுள்ளார்.
அப்போது மேலே இருந்த மூன்று நண்பர்களும் நீச்சல் தெரியாததால் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்யவில்லை. இதனால் இருவருமே கிணற்றிந் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் வந்து மீட்டனர். போலீஸ் குறும்படம் எடுக்க வந்துதான் இறந்தார்கள் என்று சொல்ல, ஏரியா பொதுமக்கள அதை மறுக்கின்றனர்.
சங்ககிரி ஏரியா பொதுமக்கள் "காவிரி பாயும் ஏரியா இது. அந்தளவுக்கு ஆற்று படுகை பகுதிகளில் கஞ்சா, 24 மணி நேரமும் சந்து கடைகள் இயங்குகிறது. அதைத் தேடி கல்லூரி மாணவர்கள் முதற்கொண்டு வருகிறார்கள். அந்த மாதிரி இந்த மாணவர்களும் வந்திருக்கலாம். கிணறு இருக்கிற ஏரியா கொஞ்சம் உள் ஏரியா. அதனால் போலீஸ் மேலோட்டமாக தகவல் சொல்லி மறைக்கிறார்கள்.
நீச்சல் தெரியாத இளைஞர்கள் என்றால் எப்படி கிணற்றில் குதிக்க தைரியம் வந்தது. கிணற்றில் சக நண்பர்கள் மூழ்கி கொண்டிருக்கும் போது மற்றவர்கள் காப்பற்றாமல் சும்மா இருப்பார்களா? தீயணைப்பு வண்டி வரட்டும் என்று காத்திருப்பார்களா? மாணவர்கள் போதையில் கிணற்றில் குதித்ததுனால் தான் இப்படி ஆகிவிட்டார்கள். விசயம் வெளிவந்தால் போலீஸ் மாமூல் வாங்கும் சந்து கடை, கஞ்சா வியபாரிகள் விபரம் வெளிவரும் என்று மறைக்கிறார்கள்" என்றார்கள் அந்தப் பகுதி மக்கள்.
சங்ககிரி போலீசாரோ "மாணவர்கள் குருட்டு துணிச்சலில் கிணற்றில் இறங்கி இறந்துவிட்டனர்' என்கிறார்கள்.
கே.பழனிவேல்