தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணவன், உடந்தையாக இருந்த மனைவிக்கு நீதிமன்றம் 20 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது.
அருப்புக்கோட்டை, கட்டங்குடி அம்பேத்கர் காலணியை சேர்ந்தவர் பொண்ணுச்சாமியின் 44 வயதான மகன் சரவணன். இவர் விறகு மற்றும் கரி மூட்டம் போடும் தொழில் செய்கிறார். இவரது மனைவி 32 வயதான நதியா. இவரது பெரியம்மாவின் மகள் 15 வயதான சிறுமி சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கட்டங்குடியில் சாந்தியின் வீடு அருகே சரவணன் விறகு வெட்டி கரி மூட்டம் போடும் வேலை செய்தார்.
அப்போது சரவணனுக்கும், சாந்திக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சரவணன், அவரது மனைவி நதியா ஆகியோர் சாந்தியை சினிமா மற்றும் வெளியூர்களுக்கு அழைத்து சென்று ஜாலியாக இருந்தனர். அப்போது சரவணன் மனைவியின் தங்கை முறையான சாந்திக்கு செக்ஸ் டார்ச்சர் அளித்துள்ளார். வெளியூருக்கு சாந்தியை அழைத்து சென்று திருமணம் செய்ய முயன்றார். இது பற்றி சாந்தியின் தந்தை கணேசன் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
சிறுமி சாந்தியின் புகாரின் பேரில் போலீசார். கடந்த 2022ல் சரவணன் மீதும் அவரது பாலியல் தொல்லைகளுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி நதியா ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் போக்சோ நீதிமன்றம் இன்று சரவணன், அவரது மனைவி நதியா ஆகிய 2 பேருக்கும் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.