விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேலு. இவர், பல ஆண்டுகளாக தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
மின்சார கட்டணமாக கடந்த 10 ஆண்டுகளாக தங்கவேலு சுமார் ஆயிரம் ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை செலுத்தி வந்திருக்கும் நிலையில் கடந்த மாதம் மின்சார கட்டணம் ரூ.35400 செலுத்துமாறு பில் வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கவேலு குழப்பத்துடன் அனந்தபுரம் மின் வாரிய அதிகாரிகளிடம் சென்று விசாரித்துள்ளார்.
அதற்கு மின் வாரிய அதிகாரிகள், ‘நீங்கள் மின் இணைப்பு பெற்றதில் இருந்து பயன்படுத்திய மொத்த மின்சாரத்திற்கான கட்டணம் இது’ என்று தெரிவித்துள்ளனர்.
அதற்கு தங்கவேலு, ‘நான் மாதந்தோறும் தவறாமல் மின்கட்டணம் செலுத்தி வந்துள்ளேன்’ என, கூறியபோதும் மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் கறாராக பேசியுள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தங்கவேலு மற்றும் அவரது குடும்பத்தினர், ‘மின் கட்டணம் விவகாரத்தில் எங்களுக்கு நியாயம் வேண்டும்’ என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.