’கேவலமான கேள்வியை கேட்காதீங்க’ என்று நடிகை விஜயலட்சுமி குறித்த கேள்விக்கு சீமான் ஆவேசமாக பதில் அளித்தார்.
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக சீமான் மீது கடந்த 2011ஆம் ஆண்டு புகார் அளித்த நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் நேற்று புகார் அளித்தார்.
அப்போது பேசிய விஜயலட்சுமி, சீமானை நம்பி தற்போது இந்த இடத்தில் நிற்பதாகவும், அவரை கைது செய்யும் விட போவதில்லை.போராட்டம் தொடரும் என கூறினார்.மேலும் , சீமான் மாட்டுக்கறி தின்னும் திமிறில் பேசி வருகிறார். அவரை நம்பி இப்போ அசிங்கப்படும் நிலைக்கு வந்துள்ளேன் என கூறினார்.
சீமானுக்கு திருமணம் ஆன போது என்ன செய்துக்கொண்டிருந்தீர்கள் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தூங்குக்கொண்டிருந்தேன் என அலட்சியமாக பதில் அளித்தார். மேலும் செய்தியாளரை உனக்கு பதில் சொல்ல முடியாது டா.. என ஆவேசமாக சீறினார். இதனால் காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் நடிகை விஜயலட்சுமி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதில் அளித்த சீமான், ”இவ்வளவு நேரம் கேள்வியை கேட்டீங்க. அது போல கேள்வியை கேட்க சொன்ன கேவலமா கேட்காதீங்க” என ஆவேசமானார். தொடர்ந்து பேசிய அவர், ”அமைதியாக கடந்து போக வேண்டும் என நினைக்கிறேன். எனக்கு கோடிக்கணக்கான குடும்பங்கள் இருக்கிறது. மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மீண்டும் மீண்டும் இதைப் பற்றி பேசுவது கேவலமாக உள்ளது.விஜயலட்சுமி கொடுத்த புகார் உண்மையாக இருந்தால் கைது செய்யட்டும்” என்று தெரிவித்தார்.
மேலும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்த சீமான், ”ஆளுநர் ராஜ்பவனில் இருக்க வேண்டிய ஆளே இல்லை, மனநல மருத்துவமனையில் இருக்க வேண்டியவர்” என்று விமர்சித்தார்.