மதுரை மாநாடு, உயர்நீதிமன்ற தீர்ப்பு: நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி- மாஜி அமைச்சர் பரபரப்பு பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தலைமையில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசியுள்ளார்.
மாஜி அமைச்சர் காமராஜ்
மாஜி அமைச்சர் காமராஜ்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை வரவேற்று தஞ்சை ரயில் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் அதிமுகவினர் 100-க்கும் மேற்பட்டோர் வெடி வெடித்து - இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இனிப்புகளை வழங்கும் காமராஜ்
இனிப்புகளை வழங்கும் காமராஜ்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ், " ஓபிஎஸ், வைத்தியலிங்கம் போன்றவர்கள் இந்த இயக்கத்திற்கு செய்த துரோகம் என்பது மிகப்பெரிய துரோகம். ஓபிஎஸ் போன்றவர்கள் இந்த இயக்கத்திற்கு ஒற்றை தலைமை வரக்கூடாது என்று எண்ணினார்கள்.

அதையெல்லாம் மீறி தொண்டர்களின் பலத்தால் ஒற்றைத் தலைமையாக இபிஎஸ் வந்துள்ளார். பொதுச்செயலாளராக வருவதற்கு எவ்வளவோ இடையூர் கொடுத்தார்கள், எத்தனையோ நீதிமன்றங்களை நாடினார்கள். அத்தனையும் தாண்டி வெற்றி பெற்ற ஒரே தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான். இன்றைக்கு வந்துள்ள தீர்ப்பு அப்படித்தான் இருக்கிறது. இந்த தீர்ப்பு மூலம் நியாயம், நேர்மை வெற்றி பெற்றிருக்கிறது.

செய்தியாளர்களிடம் பேசிய காமராஜ்
செய்தியாளர்களிடம் பேசிய காமராஜ்

டெல்டா மாவட்டமாக இருந்தாலும், தென் தமிழகமாக இருந்தாலும் எல்லாம் இபிஎஸ் கோட்டையாக உள்ளது. இபிஎஸ் தலைமையில் அதிமுக கொடிகட்டி பறக்கிறது. மதுரையில் நடைபெற்ற மாநாடு, இன்று உயர்நீதிமன்றத்தில் கிடைத்துள்ள தீர்ப்பு இதையெல்லாம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பதற்கான அச்சாரமாக உள்ளது. எங்கள் அணி வலுவானது" என தெரிவித்துள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com