5 ஆண்டுகளாக தனது பேத்தி நாள்தோறும் செல்போனை பயன்படுத்தி வருவதாகவும், பேத்திக்கு அறுவுரை வழங்க வேண்டும் என முதியவர் ஒருவர் எஸ்.பி-யிடம் புகார் அளித்துள்ளார்.
வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் கண்ணாவிடம் பொது மக்கள் பல்வேறு புகார்களை தெரிவித்தனர். அப்பொழுது வேலூர் தொரப்பாடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுப்ரமணியன், எஸ்.பி. ரஜேஷ் கண்ணாவிடம் கண்ணீர் மல்க மனுவொன்றை அளித்தார். அதில், ’’ எனது மகன் வழி பேத்திக்கு 26 வயதாகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஒரு நாளைக்கு 18 மணி நேரம் செல்போனில் மூழ்கி கிடக்கிறார். எவ்வளவு சொல்லியும், செல்போன விடும்படி கெஞ்சி கேட்டும் விட மறுக்கிறார். எப்படியாவது என் பேத்தியை திருத்த வேண்டும். அவர் போனிற்கு அடிமையாகி விட்டார் என்று கண்ணிர் மல்க புகார் அளித்தார்.
தாத்தவின் மன வேதனையைப் புரிந்து கொண்ட எஸ்.பி. ரஜேஷ் கண்ணா வேலுர் அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அதற்கென்று ஒரு தனிப்பிரிவு இருக்கிறது. அங்கு சிகிச்சைக்கு பரிந்துரைத்தார்.
-அன்புவேலாயுதம்