தூத்துக்குடி: ’எங்களுக்கு அழைப்பில்லை’-கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

நிகழ்ச்சிகளில் கவுன்சிலர்களுக்கு அழைப்பு கொடுக்காமல் இருக்கிறார்கள்.
தூத்துக்குடி: ’எங்களுக்கு அழைப்பில்லை’-கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் சேர்மன் வசுமதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பேசிய தி.மு.க கவுன்சிலர் அந்தோணி தனுஷ் பாலன், "மாப்பிள்ளை யூரணி பஞ்சாயத்து பகுதியில் அதிக அளவிலான அரசு நிகழ்ச்சியில் நடைபெறுகிறது. அதில் தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். சமீபத்தில் கிராம சபை கூட்டம் மிகச் சிறப்பாக நடந்தது. ஆனால், இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு எங்களுக்கு அழைப்பு கொடுப்பதில்லை" எனக் குற்றம் சாட்டினார்.

அதற்கு பதில் சொன்ன ஊராட்சி ஒன்றிய சேர்மன் வசுமதி, "எனக்கும் அழைப்பு கொடுக்காமல் தான் நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள்" என்று வருத்தப்பட்டார்.

இது குறித்து மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமாரிடம் கேட்டோம். "அரசு நிகழ்ச்சிகளில் யாரை அழைக்க வேண்டும் என்பது அதிகாரிகள் முடிவு செய்வது. பஞ்சாயத்து தலைவர்கள் முடிவு செய்ய முடியாது" என்றார். யூனியன் சேர்மன் வசுமதியுடன் கேட்டோம். "மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதியில் பெரும்பாலும் ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து பணிகள் நடைபெறுகிறது. ஆனால், அது பற்றிய நிகழ்ச்சிகளில் கவுன்சிலர்களுக்கு அழைப்பு கொடுக்காமல் இருக்கிறார்கள்.

சேர்மன் என்கிற முறையில் எனக்கும் அழைப்பு விடுப்பதில்லை. இது கவுன்சிலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதைத்தான் அவர்கள் கூட்டத்தில் கேள்வியாக எழுப்பினார்கள். இந்த விவகாரத்தை நான் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளேன்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com