10-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் ஆசிரியை ஒருவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 43 வயதான தேவி. துறையூரில் உள்ள ஐமீன்தார் (அரசுஉதவிபெறும் ) பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தற்போது இந்த ஆசிரியை சித்திரப்பட்டி பகுதியில் தங்கி இருந்து டியூஷன் எடுத்து வருகிறார். அதே பள்ளியில் படிக்கும் துறையூர் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு முடித்த 16 வயது சிறுவன் ஆசிரியை தேவியிடம் டியூசன் படித்துள்ளார்.
கருத்து வேறுபாடு காரணமாக ஆசிரியை தேவியும், அவரது கணவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தன்னிடம் டியூஷன் படிக்க வந்த அந்த துறுதுறுப்பான மாணவனின் குறும்புத்தனமும், அறிவுக்கூர்மையும் கண்டு தன்னை அறியாமல் தன் மனதை அவனிடம் பறி கொடுத்திருக்கிறார் ஆசிரியை. அருகில் அமர்ந்து பாடம் சொல்லித் தரும்போது ஏற்பட்ட சின்னஞ்சிறு உரசல்கள் ஆசிரியைக்கு தன்னுடைய கடந்த காலத்தை நினைவுபடுத்தி இருக்கிறது.
மெல்ல மெல்ல அவனை தன்னுடைய பாலியல் பசிக்கு இரையாக்கிக் கொண்டார். எதையும் தேடித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொண்ட பதின் பருவம், அவனுக்குள் தீயை மூட்டியது.
கடந்த சில மாதங்களாக இந்த உறவு எந்த பிரச்சனையும் இன்றி தொடர்ந்திருக்கிறது. ஆனால், தன் வயதை ஒத்த மாணவர்களிடம் நெருங்கி பழகாமல் இருப்பது, வீட்டில் யாரிடமும் அதிகம் பேசாமல் இருப்பது, ஆசிரியை தேவி குறித்து எப்போதும் பேசுவது, அப்படி பேசும் போது மட்டும் உற்சாகத்தில் இருப்பது, என சிறுவனின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தை அவனது பெற்றோர் கவனித்தனர்.
இதைத்தொடர்ந்து தோண்டித் துருவி விசாரித்ததில் கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று 16 வயது சிறுவனுக்கு ஆசிரியை பாலியல் தொந்தரவு கொடுத்தது குறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளான். உடனே முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் தேவி மீது மாணவனின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுபலக்ஷ்மி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு போக்சோ வழக்கு பதிவு செய்து மாணவனை திருச்சி குழந்தைகள் நல அமைப்பு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர். ஆசிரியர் தேவியை போக்சோ வழக்கில் கைது செய்தனர். சிறப்பு வகுப்புக்கு வந்த சிறுவனிடம் பாலியல் தொந்தரவு செய்த பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை அடுத்து பெண் பிள்ளைகளை மட்டுமல்லாது, ஆண் பிள்ளைகளையும் நெருக்கமான கண்காணிப்பில் கூடுதல் அக்கறையோடு பெற்றோர் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களிடம் இயல்பாக நெருக்கமாக பழகி பேச வேண்டும். அவர்களுக்குள் ஏற்படும் சின்னஞ்சிறு மாற்றங்களைக் கூட உற்று கவனித்து அவர்களின் பதின் பருவ கவனத் தடுமாற்றங்களை சரி செய்து வளர்க்க வேண்டும் என்பது பாடமாகியுள்ளது.
-ஷானு