கிருஷ்ணகிரி: லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து - 2 கி.மீ தூரம் போக்குவரத்து பாதிப்பு

லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்து காரணமாக 2 கி.மீ தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
போக்குவரத்து பாதிப்பு

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து இரும்பு உருளை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் நோக்கி லாரி வந்துகொண்டு இருந்தது.

ஒசூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் லாரி வந்தபோது பின்னால் வந்த அரசு பேருந்து நிலைதடுமாறி முன்னால் சென்ற லாரி மீது திடீரென மோதியது.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர் உள்பட 8 பயணிகள் லேசான காயம் அடைந்தனர். விபத்து காரணமாக இரும்பு உருளையின் பாரம் தாங்காமல் லாரி அந்தரத்தில் நின்றது.

மேம்பாலத்தின் மீது விபத்து ஏற்பட்டதை அடுத்து லாரியை அப்புறப்படுத்தும் பணி தீவிரமடைந்தது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி லாரி அப்புறப்படுத்தப்பட்டது.

இந்த பணி காரணத்தினால் பெங்களூருவில் இருந்து ஒசூர் நோக்கி வரக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு சர்வீஸ் சாலைக்கு மாற்றப்பட்டது. இதனால் 2 கிமீ தூரத்திற்கு லாரி, பேருந்து உள்பட வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுமார் அரை மணிநேரமாக ஆம்புலன்ஸ் வாகனம் கூட நகர முடியாமல் சைரன் ஒலித்தபடி இருந்த நிலையில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்து ஆம்புலன்ஸ் விரைந்து செல்ல வழி ஏற்படுத்தி அனுப்பி வைத்தனர். அதன் பிறகே அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com