திருவண்ணாமலை: பள்ளிப் பேருந்தை இயக்கி ஆட்சியர் ஆய்வு - டிரைவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

தனியார் பள்ளிப் பேருந்துகளை ஓட்டி ஆய்வு செய்த ஆட்சியர் டிரைவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
பேருந்தை ஆய்வு செய்யும் ஆட்சியர்
பேருந்தை ஆய்வு செய்யும் ஆட்சியர்

தனியார் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்து ஆய்வு செய்யும் முகாம் வட்டார போக்குவரத்துத் துறை சார்பில் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வு நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்டோர் ஆய்வில் கலந்துகொண்டனர்.

ஆய்வின்போது தனியார் பள்ளி பேருந்துகளின் தரம், பேருந்துகள் இயங்கும் தன்மை, பேருந்துகளில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அவசரக் காலத்தில் மாணவர்கள் வெளியே செல்லக் கூடிய முறையான பராமரிப்பில் உள்ளதா? என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

இன்று முதல் நாள் ஆய்வின்போது 580 பேருந்துகள் 121 பள்ளிகளில் இருந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், பள்ளி பேருந்துகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அனைத்து டிரைவர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவுறுத்தினார்.

இதன் பின்னர் பள்ளி பேருந்துகளை இயக்கும்பொழுது எதிர்பாராமல் ஏற்படக்கூடிய விபத்துகளை எப்படி திறமையாக கையாள வேண்டும்? என்பது குறித்து தீயணைப்புத் துறை சார்பில் டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் இந்த முகாமின்போது பள்ளி பேருந்துகளை தானே ஓட்டிச்சென்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆய்வு மேற்கொண்டதோடு, தனியார் பள்ளி வாகனங்களை இயக்குவது, பராமரிப்பது ஆகியவற்றில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை டிரைவர்களுக்கும், பள்ளி நிர்வாகிகளுக்கும் விளக்கினார்.

- மாசிலா மகேஷ், திருவண்ணாமலை

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com