திருப்பதி மாவட்டம் ரேனிகுண்டா அடுத்த தாரகராம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமா. இவர் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனைக்குச் சென்று வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு அவரைச் சந்தித்த ஸ்ரீ காளஹஸ்தியைச் சேர்ந்த போலி சாமியார் சுப்பையா என்பவர், உனக்கு ஏற்பட்டிருக்கும் உடல் உபாதை மருந்து மாத்திரைகளால் குணமாகாது. மாந்திரீகத்தால் தான் குணமாகும். உன்னைப்போல் பலரைக் குணப்படுத்தி இருக்கிறேன்.’ என்று சொல்ல ஹேமாவும் சம்மதித்தார். அதற்கு முப்பதாயிரம் ரூபாய் கட்டணமாகப் பேசிய போலி சாமியார் சுப்பையா முன் பணமாக 7500 ரூபாய் பெற்றுக் கொண்டார்.
பின்னர் அதன் பிறகு இரவு ஹேமாவின் வீட்டுக்குப் போனவர் வீட்டின் ஆறு இடங்களில் கோலம் போட்டு எலுமிச்சம்பழம் மஞ்சள், குங்குமம் தூவிவிட்டு நடு வீட்டில் பெரிய பொம்மை ஒன்றை வரைந்து அதில் ஹேமாவை உட்கார வைத்தார். ஹேமா உட்கார்ந்ததும், சரீர ஷேம பூஜைக்கு வஸ்திரம் ஆகாது. அதனால் எல்லா ஆடைகளையும் கழட்டி வைக்கச் சொல்லி இருக்கிறார். பயந்து போன ஹேமா போலி சாமியாரின் தில்லுமுல்லுவை தெரிந்து கொண்டு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து விரைந்து சென்ற போலீசார் போலி சாமியார் சுப்பையாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.