தூத்துக்குடியில் பாலியல் புகாரில் அ.ம.மு.க. நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை எம்மா கிழவிவிளை பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் வின்சென்ட் ராஜ். கார் டிரைவரான இவர் தூத்துக்குடி மாவட்ட அ.ம.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக இருந்து வருகிறார்.
கிழவிவிளை பகுதியில், 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று மின்தடை ஏற்பட்டதும் அந்த பெண் வீட்டில் மின் விளக்குகள் எரிய வில்லை. எனவே, மின்விளக்கை சரி செய்ய அந்த வழியாக வந்த வின்சென்ட் ராஜை அழைத்துள்ளார்.
இதையடுத்து, அந்த வீட்டுக்கு சென்றார் வின்சென்ட் ராஜ், மின்விளக்கு எரியாதால் வீடு இருட்டாக இருந்தது. அந்தப் பெண் தனியாக இருந்தார்.
அக்கம் பக்கத்திலும் யாரும் இல்லை. இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட வின்சென்ட் ராஜ், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டவே, வின்சென்ட் ராஜ் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து தட்டார்மடம் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார்.
அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் முகம்மது சபீக் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், வின்சென்ட் ராஜ், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, இது தொடர்பாக, வின்சென்ட் ராஜை போலீசார் கைது செய்தனர்.