திருவண்ணாமலை: பிளஸ் 2 மாணவன் விபரீத முடிவு - அதிர்ச்சி பின்னணி

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் முன்பே தோல்வி அச்சத்தால் மாணவர் தற்கொலை செய்துக்கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை: பிளஸ் 2 மாணவன் விபரீத முடிவு - அதிர்ச்சி பின்னணி

திருவண்ணாமலை அருகே பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு பார்க்கும் முன்னரே தோல்வி அச்சத்தால் மாணவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டத்திற்கு உட்பட்ட நாராயணகுப்பம் பகுதியைச்சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மகன் ஹரி. இவர் தண்டராம்பட்டில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்துள்ளார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதி முடிவிற்காகக் காத்திருந்த நிலையில், மாணவர் ஹரி வீட்டின் 2-வது மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே மாணவர் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து மாணவனின் உடலை கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகத் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், பயத்தின் காரணமாக மாணவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இது சம்மந்தமாகத் தானிப்பாடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பு:

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் தற்காலிகமானதுதான். தற்கொலை எதற்கும் தீர்வாகாது. ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் உருவானாலோ அதில் இருந்து மீண்டும் வர கீழ்க்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மைய எண்: 104

சினேகா தொண்டு நிறுவனம்:

எண்-11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028.

தொலைபேசி எண்: 044 24640050 மற்றும் 044 2464 0060

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com