தனியார் வங்கி முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் இருந்த ரூ.2.32 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதில் தனியார் வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஜோலார்பேட்டை அடுத்த கோடியர் பகுதியிலிருந்து இயங்கிவரும் தனியார் வங்கி முன்பு நிறுத்தி இருந்த வாடிக்கையாளர் இருசக்கர வாகனத்திலிருந்த 2.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், கோடியர் அடுத்த மேட்டுச் சக்கர குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ஆறுமுகம் இவரது மனைவி சுவிதா(42).
இவர் அதே பகுதியில் மற்றொருவரிடம் 5 லட்சம் ரூபாய் சீட்டுக் கட்டி வந்ததாகவும், அந்தச் சீட்டுப் பணத்தை எடுத்து வந்து கோடியரில் இயங்கும் வங்கியில் செலுத்துவதற்காகத் தனது இரு சக்கர வாகனத்தில் ரூபாய் 4. 65 லட்சத்தை எடுத்து வந்துள்ளார். வங்கி எதிரில் நிறுத்திவிட்டு ரூபாய் 2,33,000 பணத்தைத் தனது தங்கையின் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்காக வாங்கிக்குச் சென்றுள்ளார்.
அப்போது வங்கியின் உள்ளிருந்து வந்த மர்ம நபர் ஒருவரும், மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபரும் கூட்டாகச் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூபாய் 2 லட்சத்து 32 ஆயிரம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து வங்கி மேலாளரிடம் கேட்டபோது சிசிடிவி காட்சிகளைத் தர மறுத்துள்ளார்.
எனவே வங்கி கொள்ளைச் சம்பவத்தில் வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.