பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற இளைஞர்- இறுதியில் நடந்தது என்ன?

மாணவியை மருத்துவப் பரிசோதனைக்கு போலீசார் உட்படுத்தினர்.
 யுகேந்திரன் என்கின்ற விக்கி
யுகேந்திரன் என்கின்ற விக்கி

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், ராமாபுரம் பகுதியை சேர்ந்த 15 வயதான மாணவி. கனகம்மாசத்திரம் அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்நிலையில் காவேரிராஜபுரம் அருகே உள்ள அருந்ததி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த யுகேந்திரன் என்கின்ற விக்கி (வயது 22) என்பவர் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி கடந்த மாதம் வெளியூருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கனகம்மா சத்திரம் காவல் நிலையத்தில் யுகேந்திரன் மீது புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி மற்றும் யுகேந்திரனை போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் மாணவியை மருத்துவப் பரிசோதனைக்கு போலீசார் உட்படுத்தினர். மருத்துவப் பரிசோதனை முடிவில் யுகேந்திரன் மாணவியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து கனகம்மா சத்திரம் காவல் நிலைய விசாரணை மேற்கொண்டார். பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட யுகேந்திரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com