'மாட்டை காப்பாற்ற சென்று புலியிடம் சிக்கிய விவசாயி' - என்ன நடந்தது?

நள்ளிரவு சிற்றாறு காலனி பகுதியில் புலி ஒன்று வந்துள்ளது. அப்போது சுரேஷ்குமார் என்பவருக்குச் சொந்தமான மாடு வெளியில் கடிபட்டிருந்தது திடீரென மாட்டினை கடித்து இழுத்துள்ளது. மாட்டின் சத்தத்தைக் கேட்டு சுரேஷ்குமார் வெளியே வந்து பார்த்த போது புலி மாட்டைக் கவ்விப் பிடித்துக் கொண்டிருந்தது. உடனடியாக புலியிடமிருந்து மாட்டை மீட்பதற்காக சுரேஷ்குமார் முயன்ற போது அவரையும் புலி தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
புலியால் தாக்குதலுக்கு உள்ளான மாடு
புலியால் தாக்குதலுக்கு உள்ளான மாடு

சிற்றார் பகுதியில் மாட்டை காப்பாற்ற சென்ற விவசாயியை புலி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையோர பகுதியான சிற்றார் காலனி பகுதியில் சுமார் 165 குடியிருப்புகள் உள்ளது.

இங்கு அரசு ரப்பர் தோட்டத்தில் பணியாற்றும் கூலித் தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். கடந்த புதன்கிழமை குடியிருப்பு பகுதியில் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடு ஒன்றைப் புலி பிடித்துச் சென்றாக வனத்துறையினருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் புலிகள் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காக சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தி தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு சிற்றாறு காலனி பகுதியில் புலி ஒன்று வந்துள்ளது. அப்போது சுரேஷ்குமார் என்பவருக்குச் சொந்தமான மாடு வெளியில் கட்டப்பட்டிருந்தது.

அப்போது புலி திடீரென மாட்டினை கடித்து இழுத்துள்ளது. மாட்டின் சத்தத்தைக் கேட்டு சுரேஷ்குமார் வெளியே வந்து பார்த்தபோது புலி மாட்டைக் கவ்விப் பிடித்துக் கொண்டிருந்தது.

உடனடியாக புலியிடமிருந்து மாட்டை மீட்பதற்காக சுரேஷ்குமார் முயன்றபோது அவரையும் புலி தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

இச்சம்பவத்தால் தொழிலாளர்கள் பால் வடிக்கும் தொழிலுக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். மலைக்கிராம மக்களின் நிலைய கருத்தில் கொண்டு வனத்துறை அதிகாரிகள் காட்டுப் பகுதியில் சுற்றி திரியும் புலியைப் பிடித்து வேறு பகுதியில் கொண்டு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com